இந்த நாட்டின் வைதீகப் பழக்கவழக்கங்கள் மற்றும் சாஸ்திர சடங்குகளின் கோட்டையைத் துணிச்சலுடன் தகர்த்தவர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். அவரது குணாதிசயத்தின் மணி மகுடம் இரக்கமோ அல்லது கல்வியோ அல்ல; மாறாக, வெல்ல முடியாத ஆண்மை மற்றும் அழிவற்ற மனிதநேயம் ஆகியவையே.
-ரவீந்திரநாத் தாகூர்
நோபல் பரிசு பெற்ற கவிஞர்
வித்யாசாகரின் த்யாசாகரின் தோற்றம், மறுமலர்ச்சி இயக் கத்தில் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்தது. மத ரீதியான கோணத்திலிருந்து மறுமலர்ச்சி இயக்கத்தை முதன்முறையாக மடைமாற்றியவர் அவர்தான். அன்றைய நிலையில் அவர், மனிதநேய இயக்கத்தை, அறிவியல், வரலாறு மற்றும் தர்க்கத்தின் உறுதியான அடித்தளத்திலிருந்து வளர்க்க முயன்றார்.
-தோழர் சிவதாஸ் கோஷ்
நிறுவனர் - சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்)
Be the first to rate this book.