பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முன்னுரையாக எடுத்துரைக்கும் இந்நூல், பாரதிதாசனின் பாடல்களில் இயற்கை, இலக்கியம், இயக்கம் ஆகிய மூன்று பொருள்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. இயக்கம் என்பது தனியாகவும், சீர்திருத்த இயக்கம், தன்மான இயக்கம் என்று பகுத்தும் கூறப்பட்டுள்ளது. 'சங்க இலக்கியத்தில் இயற்கை. மனித வாழ்வின் பின்புலமாக அமைந்தது போல, பாரதிதாசன் பாடல்களிலும் இயற்கை அமைந்துள்ளது" என்னும் இந்நூல் ஆசிரியர் சி.பா., காலச்சூழலின் காரணமாகப் பகுத்தறிவு, பொதுவுடமை போன்ற பின்னணிகள் பாவேந்தரது கவிதைகளில் இயற்கை மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் காட்டுகிறார். மேலும், 'பாவேந்தரின் கவிதைகள் வாழும் இலக்கிய வகையைச் சார்ந்தவை' என்று ஆய்ந்து உரைக்கின்றார். 'திராவிட இயக்க கவிஞராகப் பாவேந்தர் மாறிய பின்பு பாடிய இசைப் பாடல்கள், கைம்மைக் கொடுமை, மொழி இள விடுதலை ஆகிய கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்டு அமைந்துள்ளன' என்று கூறுகிறார். இவ்வாறு பாரதிதாசனின் படைப்புகளைப் பற்றி ஆழமாக ஆய்ந்து உரைத்துள்ளார்.
Be the first to rate this book.