பாசாங்குத்தனமில்லாத எழுத்து நடை சி.எம்.முத்துவினுடையது. தஞ்சை மண்ணின் அடித்தள அழகை அதன் முரண்களை அற்புதமாக வெளிக்கொணர்ந்த மன்மணம் மிக்க வீரியமான படைப்பாளர். இவரின் எழுத்து நேர்த்தியான எளிய நடையில் ஒருவித இனிமைதரும் பேச்சுமொழியில் தஞ்சை வட்டாரத் தமிழின் வெவ்வேறு சாயல்களுடன் கூடியது. எதார்த்தமாகக் கண்டதை எதார்த்தமாகப் பதிவு செய்வதில் வல்லவரான சி.எம்.முத்து அவர்கள். காவிரிப் படுகையின் கதையை உலகிற்கு சொல்லவேண்டுமென்ற உயிர்த்தவிப்போடு எழுதி வருபவர்களில் முதன்மையானவர், அவர் சமீபத்தில் எழுதிய சிறுகதைகளை ஒன்றுதிரட்டி உருவாக்கியிருப்பதே "புளிப்புக்கனிகள்" நூல். மேலும், இவர் எழுதிய 'மிராசு' மற்றும் 'சோழகர்' நாவல்கள் சாகித்திய அகாதமி பட்டியலில் இருக்கின்றன. என்பது குறிப்பிடத்தக்கது.
-ஜின்னா அஸ்மி
பதிப்பாளர்
Be the first to rate this book.