விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் குறித்தும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்தும் எம்.ஆர்.நாராயண் ஸ்வாமி அளவிற்கு அறிந்தவர்கள் மிகச் சிலரே. ஒரு பத்திரிகையாளராகத் தன் துறைமீது அவர் கொண்டிருக்கும் ஈடுபாடும், தகவல்களைத் துல்லியமாகச் சேகரிக்கும் தன்மையும்தான், இலங்கையில் உருவெடுத்த தமிழ் ஆயுதப் போராட்டம் குறித்த அவருடைய விரிவான ஆய்விற்குக் காரணம். பரபரப்பான எழுத்து நடையில், 2009ல் போர்க்களத்தில் மரணத்தைத் தழுவியதோடு முடிவுக்கு வந்த பிரபாகரனின் தலைமைப் பண்பு குறித்து ஒரு விரிவான ஆய்வை இந்தப் புத்தகத்தில் நாராயண் ஸ்வாமி முன்வைத்துள்ளார்.
தன்னை வெல்ல எவருமில்லை என்று நம்பிய ஒரு கெரில்லாத் தலைவரைப் பற்றி நீண்டகாலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட, அவசியமான அரசியல் கூறாய்வு இந்நூல். அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய படைப்பு.
- நிருபமா சுப்ரமணியன்
இலங்கையின் கொந்தளிப்பான வரலாற்றைப் பதிவு செய்யும் முக்கிய விமர்சகர்களில் ஒருவரான எம்.ஆர்.நாராயண் ஸ்வாமி, சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இந்த நூலை எழுதி இருக்கிறார். இந்தச் சுவாரசியமான விவரணை, பிரபாகரன் மற்றும் அவரது இயக்கத்தின் முக்கியமான தவறுகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, ஒரு காலத்தில் வீழ்த்த முடியாத சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்பாராத வீழ்ச்சியையும் வரிசைப்படுத்துகிறது. துல்லியமான ஆய்வின் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் பிரபாகரனின் இறுதித் தோல்விக்குகான காரணங்கள் குறித்த ஆழமான பார்வையை ஸ்வாமி இந்த நூலில் ஆவணபப்டுத்துகிறார்.
- ஜாஃப்னா மானிடர்
Be the first to rate this book.