நமது வாழ்க்கை முறை விஞ்ஞான வளர்ச்சியால் மாறிப் போனாலும் மகாபாரதத்துக் கதாபாத்திரங்களிலிருந்து நாம் அதிகம் மாறிவிடவில்லை. புராணகாலத்து சகுந்தலை பட்ட வேதனையெல்லாம் புதினத்தின் சகுந்தலாவுக்கும் உண்டு. துஷ்யந்தனின் குழப்பங்களிலெல்லாம் ராஜமோகனும் அனுபவிக்கிறான். அப்படிப்பட்ட அனுபவங்கள் அசாதாரணமானவை அல்ல. இந்தக் கதையை முடித்தபோது என்னை மிதமிஞ்சிய ஆயாசம் ஆட்கொண்டது. சாத்திரங்கள் நியதிகள் கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள் மாறும் ஆனால் மனிதன் என்பவன் மாறவில்லை.
அதே போல வாழ்வின் ஆதார உண்மைகள், தார்மீக சத்தியங்கள் மாறாது. மாறக்கூடாது என்ற நம்பிக்கையில் வளர்ந்த புதினம் இது. கற்பனைக் கதை என்றாலும் இதில் வரும் மாந்தர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள், பொய்மை யற்றவை. நீங்களும் நானும் தினம் தினம் சந்திப்பவை. உணர்பவை.
நாவலைப் படிக்கும் உங்களை அந்த உணர்வுகளோடு ஐக்கியப்படுத்த அதன் கதையோட்டம் உதவுமானால் அதன் கதாபாத்திரங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று கொள்ளலாம்.
- வாஸந்தி
Be the first to rate this book.