பொதுவுடைமை குழந்தைகளுக்காக

பொதுவுடைமை குழந்தைகளுக்காக

1 rating(s)
142 ₹150 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: பீனி அடம்ஸாக்
Translator: எம். பாண்டியராஜன்
Publisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Coming Soon
QR Code
Notify me when available


 
Source : Communism for Kids

Other Specifications

Language: தமிழ்
Published on: 2021
Book Format: Paperback

Description

நூலாசிரியர் பீனி அடம்ஸாக் என்பாரிடம் இந்த நூல் குழந்தைகளுக்கானதா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, இல்லை இது எல்லோருக்குமானது எந்த வயதினரானாலும் அவர்களைக் குழந்தைகளாகப் பாவித்து நான் எழுதியுள்ளேன் என்று பதிலுரைத்துள்ளார். உண்மைதான் இந்நூல் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதே எளிமை மொழிபெயர்ப்பாளராலும் காப்பாற்றப்பட்டுள்ளது.

நூல் முழுவதிலும் ஒரு கதைத் தன்மை பரந்துள்ளது. நூலில் முதலாளிகளுக்குப் பதிலாகத் தொழிற்சாலைகள் பேசுகின்றன. அரசர்களுக்குப் பதிலாகப் பேராசை கொண்ட ராணிகள் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கின்றனர்.

இந்நூலைப் படிக்கும்போது, குழந்தைகளைப் போலச் சுதந்திரமாகக் கற்பனை செய்யுங்கள், கனவு காணுங்கள்! என்று ஆசிரியர் நம்மை அழைக்கிறார். நீதி நியாயத்திற்காகப் பழங்காலம் தொட்டே தேவதைக் கதைகள், அதிசயக் கதைகள் எழுதப்படுவதில்லையா? என்று நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

இந்த நூலை நான் இன்னும் முழுதும் எழுதி முடிக்கவில்லை,நீங்களே எழுதி முடியுங்கள்!என்று கூறுகிறார்.இவை எல்லாமாகச் சேர்ந்துதான் இந்நூல் "குழந்தைகளுக்கான" நூலாக ஆகிறது.

பொதுவுடைமை என்பதைப் புரிந்து கொள்ள இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் போன்ற ஆழங்களைத் தேடி அலைய வேண்டாம்; அரசியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர்களாலேயே பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள முடியும் என்பதுவும் தேவையில்லை;

நடைமுறை வாழ்க்கையில் பொதுவுடைமையை அவசியப்படுத்திய முதலாளியம் பற்றிய புரிதலிலிருந்தே தொடங்குவோம் என நூலாசிரியர் கருதுகிறார்.

நூலின் மூன்றாவது பகுதி "பொதுவுடைமை வேட்கை" எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பும் அது குறித்த விவாதமும் விரிவான ஒரு பின்புலத்தை கொண்டவை.

இடதுசாரிகள் அல்லது கம்யூனிஸ்ட்கள் ஒவ்வொரு முறை பொதுவுடைமைக்கான தமது முயற்சிகளில் தோற்கும்போது வரலாற்று ரீதியாகவும் இருத்தலியல் ரீதியாகவும் ஒரு துயரம் அவர்களைப் பற்றிப் பீடிக்கிறது.

வால்ட்டர் பெஞ்சமின் என்ற மேற்கத்திய மார்க்சியர் இதனை இடதுசாரித் துயரம் (Left Wing Melancholy) என்று பெயரிட்டார்.தொடர்ந்து அதுகுறித்து பேசும்போது அன்னார்,இடதுசாரித் துயரம் கம்யூனிஸ்டுகளை முழுவதும் வீழ்த்திவிடுவதில்லை; மாறாக அது பொதுவுடைமையை மறு கட்டுமானம் செய்வதற்கான ஒரு படைப்புக்களமாக உருவெடுக்கிறது என்று சித்திரித்தார். இதையொட்டி ஒரு புதிய கருத்தாக்கமாக கம்யூனிஸ்ட் வேட்கை (Communist Desire,Desire for Communism) என்ற சொல்லாக்கம் உருவானது.

இடதுசாரிகள் தமது துயரத்தை வென்று புதிய படைப்பாக்கத் தளங்களை நோக்கி முன்னேறிச் செல்லுவதற்கான ஆதாரமாக கம்யூனிஸ்ட் வேட்கை அமைகிறது என்ற கோட்பாட்டு விளக்கம் உருவானது.

Ratings & Comments

Add Rating & Comment


 
1 rating(s)
5
1
4
0
3
0
2
0
1
0

5 மார்க்சியா செவ்வியல் நூல் வரிசை எண் 3

பொதுவுடைமை குழந்தைகளுக்காக மார்க்சியா செவ்வியல் நூல் வரிசை எண் 2 ஆசிரியர்: பீனி அடம்ஸாக் தமிழில்: எம்.பாண்டியராஜன் வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் விலை: 150 நூலாசிரியர் பீனி அடம்ஸாக் என்பாரிடம்,”இந்த நூல் குழந்தைகளுக்கானதா..? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, இல்லை இது எல்லோருக்குமானது.எந்த வயதினரானாலும் அவர்களைக் குழந்தைளாகப் பாவித்து நான் எழுதியுள்ளேன்” கதை என்ற வடிவம் அவ்வளவு எளிதில் கடந்து போக்கூடிய விசயம் இல்லை, மதம்,போர்,பன்பாடு,கலாச்சாரம்,வீரம்,இனம், நாடு,நாட்டுபற்று சாதி,மொழி,அரசியல்,தத்துவம்,கலை,இலக்கியம் என இன்னும் பல்வேறு கருத்துகள் பல கோடி மக்களை சென்றடைந்தது மட்டும் இல்லமால் அவற்றை பின்பற்ற செய்து.அதே ஒரு வெறியாக மாறி சகமனிதன் அதை ஏற்க்கமால் மாற்று கருத்து சொன்னால் அவர்களை கொன்று குவிக்கும் அளவுக்கு மனிதனின்இன்னொறு முகத்தை உலகறிய செய்ததற்க்கு கதைக்கு பெரிய பங்கு உண்டு.இந்த நூலும் ஓரு கதை வடிவம் தான்.... நூலில் முதலாளிகளுக்குப் பதிலாகப் தொழிற்ச்சாலைகள் பேசுகின்றன.அரசர்களுக்குப் பதிலாகப் பேராசை கொண்ட ராணிகள் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கின்றனர்.இந்த நூலைப் படிக்கும்போது,குழந்தைகளைப் போலச் சுதந்திரமாகக் கற்பனை செய்யுங்கள்,கனவு காணுங்கள் என்று நம்மை அழைக்கிறார். 20 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் தகர்ந்து,பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு,இனி முதலாளியத்திற்கு வேறு மாற்று இல்லை...! முதலாளியமே வரலாற்றின் முடிவு..! என்று அறிவிக்கப்பட்ட அந்த நாட்களில் இல்லை முதலாளியத்திற்கு மாற்று பொதுவுடைமையே என்ற குரலுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. நூலின் முதல் பகுதி முதலாளியம் பற்றியது....! கடந்த 500 ஆண்டுகளில் முதலாளியம் உற்பத்தி செய்துள்ள அத்தனை கேடுகளுக்கும் மாற்றாக அமைவது பொதுவுடைமையே என்று தொடங்குகிறார்,முதலாளியம்,உழைப்பு,தொழில் உற்பத்தி,உற்பத்தியாகும் பொருட்கள்,சந்தை,நெருக்கடி போன்ற விடயங்களைப் பற்றிய எளிய புரிதல்களை வழங்குகிறார். நூலின் இரண்டாவது பகுதி...! கடந்த இருநூறு ஆண்டுகளில் மனித சமூகம் பொதுவுடைமையைச் சாதிக்க என்னென்ன முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.சமூக சனநாயகம்,எந்திரங்களை உடைத்தெறியும் லுட்டியம், தொழில்நுட்ப நுகர்வுவாதம்,அராஜகம்,அரசு சோசலிசம் போன்ற பல முயற்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு முயற்சியும் உண்மையில் வழக்கிலிருந்த முதலாளியத்தின் ஏதோ ஒரு அம்சத்தை அல்லது பண்பைப் பொதுவுடைமை எனக் கருதி அதனைப் பின்பற்றி வந்துள்ளது என்கிறார் ஆசிரியர்.பிறகு அனுபவத்தில் இருந்து எடுத்த படிப்பினையில் இருந்து “இல்லை,இல்லை இது பொதுவுடைமை அல்ல” என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம் என்கிறார் ஆசிரியர். நூலின் மூன்றாவது பகுதி “பொதுவுடைமை வேட்கை” இடதுசாரிகள் அல்லது கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு முறை பொதுவுடைமைக்கான தமது முயற்சிகளில் தோற்கும்போது.வால்ட்டர் பெஞ்சமின் என்ற மேற்க்கத்திய மார்க்சியர் இதனை இடதுசாரி துயரம் என்று பெயரிட்டார். ஆனால் அது கம்யூனிஸ்டுகளை முழுவதும் வீழ்த்திவிடுவதில்லை,மாறாக அது பொதுவுடைமையை மறு கட்டுமானம் செய்வதற்கான ஒரு படைப்புக்களமாக உருவெடுக்கிறது என்ற சித்திரித்தார். அரபு வசந்தம்,எகிப்தில்,ஏதென்ஸில்,டெல் அவிவில் என பல கிழக்கு நாடுகளில் தன்னிச்சையான மக்கள் எழுச்சிகள் உருவாயின நாங்கள் 99% சதவீதம் என்ற ஒட்டுமொத்தக் குரல் அமெரிக்க நிதிநகரமான வால் ஸ்ட்ரீட்டை அதிர வைத்தது.ஏன் மெரினாவில் எழுந்த தை எழுச்சியும் அப்படி ஒரு குரல்தான்.பொதுவுடைமையை வெகுமக்கள் மனோபாவமாக,பன்மீய மக்கள் போராட்டங்களை ஒன்றுபடுத்தும் களமாக உருவாக்க முடியும் என்கிறார். “ஒற்றுமை அரசியலால் மட்டுமே பிரிவினை அரசியலுக்குச் சவாலிட முடியும்,காலத்தின் போக்கில் வரலாறு மீண்டும் ஒருமுறை திறந்திருக்கிறது-யோசனைகளுக்காக” குழந்தைகளுக்காக என எழுதப்பட்ட இந்நூல் துயரப்பட்ட இடதுசாரி மனங்களின் அகவயப்பட்ட பார்வை ஒன்றை அழுத்தமாக முன்வைக்கிறது.ஏராளமான விவாதங்களுக்கும் உரையாடல்களுக்கும் இந்நூல் இடமளிக்கும். கற்பனையான நடக்காத பல கட்டுகதைகளை நம் குழந்தைகளைக்கு சொல்வதும் அதன் வழி நடக்கவும் சொல்கிறோம்.நடைமுறை வாழ்க்கையில் நேரடியாக மக்களை பாதிக்கும் அரசியலை தவிர்த்து .அரசியல் பேசுவதை ஒரு கேட்ட பழக்கமாக மாற்றியிருக்கிறது. அடிப்படையில் உலக அரசியல் பற்றி ஒரு சிறந்த அறிமுகத்தை இனியாவது நம் குழந்தைகளுக்கு சொல்லி தந்து வளர்ப்போம். நன்றி கணேஷ் பாரி 02-09-2021

Ganesh Pari 22-10-2021 09:26 am
Zipeit.com
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp