மருத்துவர் இராம.செல்வரங்கம் சேலத்தின் புகழ்பெற்ற கண் மருத்துவர். இனி அவர் இந்த 'பொது நானூறு" கவிதைத் தொகுப்பின் மூலம் கவிதை வித்தகர். இத் தொகுப்பின் நானூறு குறுங்கவிதைகளும் படிக்க எளியன; செரிக்க இனியன: பூடகங்களின்றிப் பாசாங்கின்றிக் கவிதைகளனைத்தும் வாசகர் மனதை வசப்படுத்த வல்லன.
-கவிப்பேரரசு வைரமுத்து
கவிதை என்பதே அனுபவம்: அனுபவம் என்பதே கவிதை. அவரவர் அனுபவம் அவர் கவிதை; அவர் கவிதை அவரவர் அனுபவம். அந்த வகையில் அச்செட்டாகப் பொருந்துகிறது மருத்துவர் அவர்களின் தொகுப்பு. எனவே மருத்துவர் ஆர்.செல்வரங்கம் இனிமேல் கவிஞர் இரா.செல்வரங்கம் எனத் தமிழ் கூறும் நல்லுலகால் விதந்தோதப்படுவார்.
-கவிதாயினி ஆண்டாள் பிரியதர்ஷனி
கண்களுக்கு ஒளி பாய்ச்சும் மருத்துவத் தாயர்... அய்யா இராம.செல்வரங்கம் அவர்கள் நெரிசல் மிகு தம் பணிகளுக்கு நடுவிலேயும் தமிழ்க் கவிதைக்கும் ஒளி பாய்ச்சும் உயர் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார் என்பது எண்ணி மகிழத் தக்கது. ஆலங்கட்டிகள் அளவிலான தமிழ்ச் செழிப்புகள். குறும்புகள் சூடிய எறும்புகளாய் சில இடங்களில் சமூகப் பொறுப்பு மிக்க கவிதைகள் நறுக் நறுக் என்று நம்மைக் கடித்து வைக்கின்றன.
-கவிஞர் அறிவுமதி
Be the first to rate this book.