இந்தப் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஏராளமான தீர்ப்புகளின் நேர்மறை-எதிர்மறைக் கருத்துகளை மேற்கோள் காட்டியுள்ளார். ஏராளமான நூல்கள் தீர்ப்புகளிலிருந்து இவ்விவரங்களைத் தந்திருக்கிறார். இன்றைய அறிவுலகம் முழு வலிமையுடன் எதிர்வினையாற்ற வேண்டிய ஒரு பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்திருக்கிறார் தோழர் அ.மார்க்ஸ் அவர்கள். நாடு முழுக்கப் பேசு பொருளாகியிருக்கும் பொதுச் சிவில் சட்டம் பற்றி மக்களிடையே நிலவும் தவறான கருத்துகளையும், அண்ணல் அம்பேத்கர் முதலிய அறிஞர்கள் முன் வைத்த விளக்கங்களையும் ஒன்று விடாமல் இந்த நூலில் தந்திருக்கிறார்.
Be the first to rate this book.