இயல்வாகைக்கு அறிமுகமான காலம் தொட்டே அண்ணன் வானவன் அவர்களை விதைகளாக, மரங்களாக, சூழலியல் செயல்களாக, சமூகத்திற்கான மனிதராகவே அறிகிறோம். அண்மைக் காலத்தில் இயற்கையின்மீது தீராத அவரது காதல், நாவல், சிறுகதை என நூல்களாகக் கனிந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
இப்போது பிறந்துள்ள 'போத்து' நாவலும் கரிம வேளாண்மையை முதன்மைப்படுத்தி இயற்கைக்கு இயைந்த வாழ்வியலைக் காட்சிப்படுத்துகிறது. தனி மனிதராகவும் குழுமமாகவும் சேர்ந்து இயற்கையைப் போற்றிப் பொருள் நிறைவு காணும் முன்மாதிரி வாழ்வியலை நாவலாக்கியிருப்பது அழகு.
மண்ணையும் மனத்தையும் பசுமையாக்கும் பணிகளால் இம்மண்ணும் மனிதமும் மாண்புறும். தொடர் செயல்களால் நிறைந்திருக்கும் திரு வானவன் அவர்களுக்கும் அத்திக் குழுவிற்கும் அன்பு வாழ்த்துகள்.
-இயல்வாகை அழகேசுவரி
Be the first to rate this book.