சாமி கிரிஷின் கவிதைகள் வாழ்வின் கவித்தருணங்களை அதன் வெவ்வேறு வர்ணங்களை எளிய மனங்களில் கண்டெடுத்து எல்லோர்க்குமானதாக வரைகின்றன. வாசிப்பவர்களின் நெஞ்சில் அப்பிக் கொள்ளும் வர்ணங்கள் எளிதில் கலையாது சொந்த அனுபவங்களாகத் திரட்சி அடைகின்றன. அதனையே இந்தக் கவிதைகளின் பலமாகக் கொள்ளலாம். புதியன நிகழும்போதெல்லாம் கவிதை தன்னை மறந்து தனக்குத்தானே கை தட்டிக் கொள்கிறது. இந்தக் கவிதைகளும் அதைச் செய்கின்றன. வாழையிலையில் உருண்டு கொண்டிருக்கும் மழைத்துளிகள் போல மிருதுவான குரலில் பேசும் கவிதைகள் அவ்வப்போது மழைக்காற்றின் உக்கிரத்துடன் வலியையும் பேசத் தவறுவதில்லை.
-இரா.கவியரசு
Be the first to rate this book.