வைர ஆபரணங்கள் அடங்கிய
பொதியெனினும் கனிந்து குழைவதில்லை
கழுதையின் வதனம்
ஒரே உயரத்தில் படுத்திருப்பதில்
என்ன சாதனை இருக்கிறது புர்ஜ் கலீபா
கட்டிடத்தின் நிழலும் பன்றிக் குடிசை நிழலும்
பாழடைந்த ரைஸ்மில் பக்கவாட்டிலும்
மூடப்பட்ட பள்ளிக்கூடத்தின் பின் சுவற்றிலும்
எழுதப்பட்டிருக்கிறது அரசின் நலத்திட்ட
விளம்பரம் மதுரை மீனாட்சியின் கிளிக்கும்
கிடைக்கவில்லை காடெல்லாம் தேடியும்
பசியாறக் கொஞ்சம் நெல்மணிகள்
Be the first to rate this book.