அப்போது 'பூனை மனிதன்' கதை பற்றிய பேச்சு இலக்கிய உலகில் பிரபலமாகி இருந்தது. எனக்குத் தெரிந்த நாலு எழுத்தாளர்களைத் தொடர்பு கொண்டு பூனை மனிதன் பற்றி விசாரித்தேன். அவர்களுக்குத் தெரியவில்லை. இந்தக் கதை நியூயோர்க்கர் பத்திரிகையில் வெளிவந்து இரண்டு வாரங்களில் 1.5 மில்லியன் மக்களைப் படிக்க வைத்தது. பத்திரிகைகளிலும், டிவிக்களிலும் இந்தக் கதை பற்றிய விவாதங்கள் நடந்தன. உலகத்தில் வெளியான முதல் வைரல் சிறுகதை என்ற பெயரைப் பெற்றது.
இந்தத் தொகுப்பில் காணப்படும் கதைகளை மொழிபெயர்த்தபோது. உலகத்துச் சிறுகதைகள் எப்படியெல்லாம் வளர்ந்துவிட்டன. எத்தனை வித்தியாசமான களங்களில் விரிகின்றன. எத்தனை விதமான மனிதர்கள் கதைகளில் எம்மை அதிசயிக்க வைக்கின்றனர் என்ற வியப்பைத் தந்தது.
-அ.முத்துலிங்கம்
Be the first to rate this book.