ஆற்றுக்குள் ஊற்றுத் தண்ணீர் எடுக்கத் தோண்டிய மணற்குழிக்குள் ஊறி நின்ற தெளிந்த நீரில் தெரிந்த நிலாவை இன்று உள்ளங்கைக்குள் கண்ணீர் ஊற்றிப் பார்க்கவேண்டிய காலக்கொடுமையை உள்ளங்காலில் குத்திய கருவமுள்ளை உப்புக்கல் வைத்துச் சுட்டு எடுக்கிற நேரத்தைய பல் கடித்தலின் இருக்கத்தோடு பதிவு செய்திருக்கிறான் தம்பி அறிவழகன். அவன் வாழ்ந்த அவனைச் சூழ்ந்த வாழ்வின் வலிகள் அவன் மண்ணின் மொழியில் அருமையாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
குறித்துக்கொள்ள வேண்டிய புதிய வரவுகளில் குறிப்பிடத்தக்கவன் தம்பி அறிவழகன்,
வாழ்த்துகளோடு
அறிவுமதி
Be the first to rate this book.