மனித வாழ்க்கையில் போலவே, இலக்கியத்திலும் பொதுவாகத் தரம் குறைவதற்கு ஒரு காரணம் நமது அளவு கோல்களை, தர மதிப்பிடும் கருவிகளைத் தளரவிட்டு விடுவதால்தான். திரும்பத் திரும்ப உலகத்து மகான்கள் போலவே இலக்கிய விமர்சகர்களும் ஒரே உண்மையை அல்லது உண்மைகளைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.
வாழ்க்கையில் தெய்வம் போல, ஆன்மீக நன்னெறி போல இலக்கியமும் இலக்கிய நெறியும். கலையும் கலைநெறியும் அவசியமானது; அடிப்படையானது என்று ஏற்றுக் கொள்பவர்களுக்கு எனக்கு விமர்சகன் செய்கிற காரியத்துக்கும் மகான்கள் செய்கிற காரியத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
Be the first to rate this book.