ஈழம், புலம்பெயர்வு எழுத்தாளர்கள் கவிஞர்கள் பதிளோரு பேருடனான உரையாடல்களின் தொகுப்பு இது.அரசியல், தத்துவம், வரலாறு, கல்வி, சமூகவியல், பண்பாடு, அறிவியல், கலை, இலக்கியம், உளவியல், மானுடவியல், பொருளாதாரம், ஆட்சிமுறைமை பற்றியெல்லாம் ஆழமாகவும் புதிதாகவும் பேசுப்படும். மாற்றுப்பார்வைகளும் அவற்றை முன்வைக்கும் அறிவியற் துணிவும்தான் இந்த நேர்காணல்களின் ஆதாரம் இலங்கை, நோர்வே, கனடா, ஆஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து. பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழ்கின்ற படைப்பாளிகளின் அந்தந்த பிராந்தியக் குரலாகவும் வரலாற்றின் ஆன்மாவாகவும் சமகால உலக மனச்சாட்சியின் எதிரொலிப்பாகவும் தங்களை ஒவ்வொருவரும் முன் வைத்திருக்கின்றனர். இவற்றைப் படிக்கும்போது ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களுடைய எழுத்தை (பிரதியை உருவாக்கும் முறைமை பற்றியும் அதனுடைய அடிப்படை அம்சங்களை தொகுத்துக்கொள்ளும் துணையெழுத்துக்களாக இந்நேர்காணல்கள் வாசகர்களுக்கும் சக எழுத்தாளர்களுக்கும் உதவக் கூடியன.
கடினமான காலத்தின் பிரதிநிதிகளான இந்தப் படைப்பாளிகள் சொல்லுகின்ற உண்மைகளும் எழுப்புகின்ற கேள்விகளும் முன்வைக்கின்ற நியாயங்களும் வாசிப்போரை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும்.
Be the first to rate this book.