கடவுள் நம்பிக்கையுள்ள மக்களிடம் அவர்களது வழிபாட்டுரிமைக்கு ஆபத்து என்று பீதியூட்டி வாக்குவங்கியாக மாற்றி அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவது. அரசியலதிகாரத்தைக் கொண்டு தமது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலைச் செயல்படுத்துவது என்னும் சங்பரிவாரத்தின் திட்டம் அவர்களுக்கு ஓரளவுக்கு பலனளித்துள்ள நிலையில்தான் தமிழ்நாட்டை அயோத்தியாக்குவோம் என்று கொக்கரிக்கின்றனர்.
-ஆதவன் தீட்சண்யா
இந்நூல் வெறுமனே சமீபத்திய திருப்பரங்குன்றம் நிகழ்வை மட்டும் குறிப்பதன்று. மாறாக, பல நூற்றாண்டு வரலாற்றை, இப்பிரச்சனை எங்கிருந்து வேர்விட்டு கிளைக்கிறது என்கிற சங்பரிவார அமைப்புகளின் அரசியல் திட்டத்தின் நோக்கத்தை, இன்றைய நிகழ்வுகளோடு இணைத்தும் தொகுத்தும் சமூக மெய்யியல் வரலாறை பேசுகிறது. மேலும் திருப்பரங்குன்றம் நீதிமன்ற தீர்ப்புகளின் வழியே நீதித்துறையின் வரலாற்றையும் பேசுகிறது.
-வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்
Be the first to rate this book.