வேலையற்ற இளைஞனின் அலைவுறுதல் படைப்புகளெங்கும் வியாபித்திருக்கிறது. தனக்கு நெருக்கமான பெண்கள் தன்னைக் கடந்து செல்வதை ஒவ்வொரு இளைஞனும் ஏக்கத்துடன் அசைபோடுகிறான். இயலாதவர்கள் - முதியவர்கள் மென்உணர்வை வாசகனுக்குப் பரிவுடன் உணர்த்துகிறார். வாசக மனதிற்குள் இலகுவாக நுழைந்து , பாத்திரங்களை நிலைக்கச் செய்கிறார். பழைய தலைமுறையின் இருத்தலியல் சிக்கல்களையும் புதிய தலைமுறையின் விலகலையும் பிரதிபலித்துக் கொண்டே இருக்கின்றன இப்பக்கங்கள்.
உதயசங்கர் (1960) நாற்பது ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆகிய வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக சிறார் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். விகடன் விருது. தமிழ்ப் பேராயம் விருது, தமுஎகச விருது. சுலை இலக்கியப் பெருமன்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.