குடும்ப அமைப்பை பேணிக் காக்கும் பொருட்டு வாழ்க்கையின் நெருக்கடியில் அகப்பட்டுக்கொண்டு குடும்பத்துடனான முக்கியமான தருணங்களையும் இழந்து நூல் பொம்மையாகும் மனிதர்களை அடையாளம் காட்டுகின்றன இக்கதைகள். தனது அகத்தை அறியவே தடுமாறும் மனம் எதிரேயிருக்கும் மனத்திற்கும் சேர்த்து விடையெழுத முயற்சித்து தோற்கும் பொழுதுகளை எழுத்தாளரால் கச்சிதமாகக் கையாள முடிந்திருக்கிறது. மனநிலைகளின் ஊசலாட்டங்களையும் தனிமனித விருப்பு வெறுப்புகளின் மீது நிகழ்த்தப்படுகின்ற அலட்சியங்களையும் ட்ரோன் காட்சிகளென விரித்திடும் கதைகளும் இத்தொகுப்பிலுண்டு.
- பத்மகுமாரி
Be the first to rate this book.