இலக்கியம் என்றாலே ஒரு விஷயத்தைத் திருகிக் கொண்டே வார்த்தைகளை நுட்பமாகப் போட்டு செக்கு போலச் சுற்றி வருவதல்ல, ஒருவனின் வாழ்வியல் என்பத்தைதான் இந்தச் சிறுகதைகள் சொல்கின்றன. தொகுப்பில் இருக்கும் சில கதைகள் மனிதர்களில் உணர்வு சிக்கலைத் தொய்வின்றி அலசுகின்றன. இன்னும் சில கதைகள் உறவில் சிக்கிக்கொள்ளும் மனிதனின் இயலாமையைப் பேசுகின்றன. மட்டுமின்றி சில கதைகள் நெகிழ்ந்து மூச்சு முட்டச் செய்கின்றன. எல்லாம் ஒன்று சேர்த்தார் போல மனித வாழ்வையும் அதில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை மனிதப்பண்பையும் வலியுறுத்திச் சொல்லாமல் வாழச் சொல்வதுதான் எழுத்தாளர் இத்ரீஸின் வெற்றி எனலாம்.
Be the first to rate this book.