பத்தி எழுத்து என்ற வகைமையை பாரதியும் அவர் காலத்தில் வாழ்ந்த பத்திரிகையாளர்களும் வெகுஜன வாசிப்புக்கானதாக மாற்றினார்கள். அதைப் பலரும் தொடர்ந்தார்கள்.
இன்றைய சமூக ஊடகங்களில் எழுதும் பல இளைஞர்கள் பத்தி எழுத்துகளில் (தோழர் சரவணகாந்தின் வார்த்தைகளில் சொல்வதானால்)பட்டையக் கிளப்புறாங்க. அப்படிப் பட்டயக் கிளப்புறவங்கள்ல ஒருத்தரா இருந்த தோழர் சரவணகாந்தின் பத்தி எழுத்துகளுக்கான அடையாளமாக இத்தொகுப்பு இருக்கிறது. இதில் பொறந்தநாள் போன்ற பத்திகள் ஒரு சிறுகதைக்கான கூறுகளைக் கொண்டுள்ளன. கொஞ்சம் செதுக்கியிருந்தால் அது சிறுகதையாகியிருக்கும்.
21 பத்திகளில் பாதிக்கும் மேல் மனிதனின் அறிவைத் தாண்டி அவனை மனதளவில் ஆட்கொண்டு ஆட்டுவிக்கும் பிரச்சினைகளைத் தொட்டிருக்கின்றன.
Be the first to rate this book.