முடிவில் ஓர் பிடி சாம்பல்! அதனையே உபயோகித்தேன்; பெற்றேன் பெரும் வெற்றி! பிடி சாம்பலால், முடியுடைய மன்னரையும் மிஞ்சிய புகழ் படைத்து, இடியெனப் போர் முழக்கமிட்டு, வெற்றிக்கொடி பிடித்து உலவிய வீராதி வீரன், வாதாபியைத் தீயிட்ட தீரன், புலிகேசியைப் போரிலே வீழ்த்திய சூரன், பல்லவ சாம்ராஜ்யத்தின் வீரச் சின்னமாக விளங்கிய படைத் தலைவன் பரஞ்ஜோதியைப் படுகளத்தில் அல்ல-பாய்ந்து தாக்கி அல்ல-கர்வாள்கொண்டு அல்ல- அவனுடைய நாட்டில், அவன் அறியா வண்ணம், ஒரு பிடி சாம்பலால் வென்றுவிட்டேன்!
அந்த வெற்றியின் தன்மை எத்தகையது? ஆஹா! எண்ணும்போதே என் உள்ளம் பூரிக்கிறது. பரஞ்ஜோதி ! தமிழகம் அந்த 'ஜோதி'யைக் காண முடியாதபடிச் செய்துவிட்டேன். பரஞ்ஜோதி' இனி இல்லை அல்லவா! அடியார் இருப்பார்! நாயன்மாராக இருப்பார்! ஆனால் தமிழகத்தின் தலை சிறந்த படைத்தலைவன் இனி இல்லை! வாதாபிகளைத் தாக்கவரும் வீரர்கள் இல்லை-தோத்தரிக்கும் திருவாயும் கூப்பிய காமும் இருக்கும். இருக்கட்டும்-கோயில் கட்டுபவர் கட்டட்டும்-பதிகம் பாடுவர்.- சலிக்காது பாடட்டும்-ஆனால் ஒரு மாவீரனை இழப்பர்; படைத்தலைவன் இனி இரான்.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.