புத்தகங்களை வாசிக்கும்படியும் அவற்றைப்பற்றிய எண்ணங்களைத் தொகுத்துக்கொண்டு யோசிக்கும்படியும் எழுதும்படியும் புதியவர்களைச் சந்திக்க நேரும் ஒவ்வொரு முறையும் நான் சொல்வது வழக்கம். பலர் அச்சொல்லை மரியாதையின் நிமித்தமாகக் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டாலும் ஒரு புன்னகையோடு கடந்துபோய்விடுவார்கள். சிலர் ஆர்வத்தின் காரணமாக தம் முயற்சியை வேகவேகமாகத் தொடங்குவார்கள்.
ஆயினும் ஏதோ காரணங்களால் தொடர்ந்து முன்னநகர முடியாமல் மெல்ல மெல்ல நின்றுவிடுவார்கள். ஜெயஸ்ரீ போன்ற ஓரிருவர் மட்டுமே தொடர்ந்து களத்தில் நின்று வெற்றியடைகிறார்கள். அவர் வெற்றியடைந்திருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பே சாட்சி.
-பாவண்ணன்
Be the first to rate this book.