தமிழில் நல்ல திரைப்படம் வருவதற்கு அதன் துறைசார்ந்த நுட்பங்கள் குறித்து விளக்கமான நூல்கள் வரவேண்டும். அதற்குத் திரைப்படத்தில் இருக்கிற பலரும் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்ய முன்வரவேண்டும். நுட்பம் குறித்த பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதன் வழியே திரைக்கலையை மேலும் எளிமையாக்கி, திரைப்படம் என்பது பெருநகரம் சார்ந்தது என்ற எண்ணத்தைத் தளர்த்த வேண்டும். மாணவ நிலையிலேயே திரைப்பட நுட்பங்களைக் கற்றுத் தரவேண்டும். அவ்வகையில் நல்ல திரைப்படம் என்கிற பெருங்கனவைச் சாத்தியமாக்க நினைப்பவர் மனதில் இந்நூல் சில துளிர்ப்புகளையேனும் நிகழ்த்தும் என நம்புகிறேன்.
செழியன்
திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குனர்.
கணையாழியின் சிறந்த சிறுகதை விருது. (2003) சிறந்த சிறுகதைக்காக 'கதா விருது (2004) சிறுகதையில் காட்சிப்படிமங்கள் என்ற ஆய்வுககாக மத்திய அரசின் ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது (2004). பரதேசி படத்துக்காக இலண்டனிலும், (2013) டுலெட் படத்துக்காக இத்தாலியிலும் (2018) சர்வதேச அளவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது. டுலெட் படத்துக்காக கொல்கத்தா திரைப்படவிழாவில் சிறந்த இந்தியப் படத்துக்கான விருது. (2018) சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றவர்.
சத்யஜித் ரேயின் முதல் படமான பதேர் பாஞ்சாலி. கடைசிப் படமான அந்தக் திரைக்கதைகளின் மொழிபெயர்ப்பு, உலக சினிமா, பேசும் படம்,முகங்களின் திரைப்படம். ஒளியில் எழுதுதல், டுலெட் திரைக்கதையும் உருவாக்கமும், ஹார்மோனியம் சிறுகதைத் தொகுதி, 'த மியூசிக் ஸ்கூல் என்ற பெயரில் மேற்கத்திய இசை குறித்த பத்துத் தொகை நூல்களின் ஆசிரியர், 'த பிலிம் ஸ்கூல என்ற பெயரில் ஒரு பள்ளியைத் துவங்கி இன்டிபெண்டண்ட் சினிமாவுக்கான கலையையும் நுட்பங்களையும் சுற்றுத் தருபவர்.
ஆனந்த விகடனில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'வந்த நாள் முதல்' என்கிற இந்தக் காதல் கவிதைத் தொடரின் ஆசிரியர்.
Be the first to rate this book.