அஷோக் ஶ்ரீநிவாசன் எழுத்தில் ஒரு விதமான மர்மம் கலந்த மாயச் சரடு மனித உறவிற்குள் புகுந்து ஒரு நெளிபாம்பு போல அசைந்து கொடுக்கிறது. இந்த உலகம் தமிழ் புனை உலகத்திற்கு மிகவும் புதிதான ஒன்றாக இருக்கும் என்று மிகத் தெளிவாக நம்புகிறேன். மன ஓடை சம்பந்தமான உணர்வியல் பகிர்வுகள், அதன் சிக்கல்கள் எல்லாமே ஒரு மென் அடர்த்தியின் பிரதிபலிப்போடு இங்கு மொழி ரீதியாக பரவி கிடக்கிறது. இதில் எந்தவிதமான தீர்மானங்களோ தீர்ப்புகளோ இல்லை. இந்த உலகம் மிகவும் அற்பமானது என்று மிக பகிரங்கமாக நம்பும் ஒரு மாய மனதின் மாய சித்திரம் தான் அஷோக் ஸ்ரீனிவாசனின் எழுத்துக்கள். மிகவும் சிக்கலான ஒரு பாதையில் நாம் பதறித் திரும்பும் நொடியில் எதிர்ப்படும் நீல வண்ண பூக்கள் போல அவருடைய எழுத்துக்களும் அவருடைய உலகமும் நம்மை கண்டடைகிறது. அது நமக்கு ஒரு இனம் புரியாத பரவசத்தை இந்த வாசிப்பின் மூலம் தந்திருக்கிறது.
-தமயந்தி
Be the first to rate this book.