கி.ரா அவர்கள் எவ்வாறு கிராமிய பின்புலத்தை முழுமையாகவும் நுட்பமாகவும் கதைக்களமாக்கினாரோ அது போலவே இத்தொகுதி மூலம் இவர் சிறுநகர் புலத்தை இலக்கியக் களமாக்கியிருக்கிறார். செயற்கையான வணிக எழுத்துக்களால் சலிப்படைந்த தீவிர வாசகனுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம்!
-மருத்துவர்.வெ. இளங்கோவன்
இந்த சிறுகதைகள் பெரும்பாலும் மிக நுட்பமான மன உணர்வுகளை வெளிப்படுத்து கின்றவையாகவும் மரத்துப் போய்விட்ட மனித மனதின் நெகிழ்வுத் தன்மையை மீட்டெடுக்கும் சிறந்த கருவிகளாகவும் இருக்கின்றன என்பதை படிக்கும்போது நம் கண் ஓரங்களில் துளிர்க்கும் கண்ணீரில் உணரமுடியும்.
-அ. பத்மநாபன், இலக்கியவட்டம்
அதென்ன எல்லா கதைகளிலும் வரும் பெண்களின் பெயர் செல்வி என்றே இருக்கிறது ! (நறுமுகைச் செல்வி, பிறை நுதற் செல்வி) ஒரு கேள்வி. (இது இல்லாமலா?) 'ஆடாத கூத்து" கதையில் பாரதியின் பாஞ்சாலிசபத வரிகளை கூத்துக்கலைஞன் பாடுவதாக உள்ளது. அப்படி பாடிய கலைஞர்கள் உண்டா?
-கவிஞர். ஜ.க. நாகப்பன்
Be the first to rate this book.