இந்நூலில் இருபது தலைப்புகள் உள்ளன. அனைத்தும் புனைவாக எழுதியவை அல்ல. மாறாக, அவர் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் நிகழ்வுகளின் வடிவங்கள், பெரியார் சொன்ன செய்திகள், வாசித்துத் தெளிந்த படைப்புகள் ஆகியவற்றை உள்வாங்கி, புரிதலின் அடிப் படையில் தன் சொந்த நடையில் கொடுத்துள்ள பாங்கு அழகு. சிறு வயதில் பெரியாரைப் பார்த்தபொழுது, குழந்தை மனதில் பதிந்துபோன பெரியாரும் பக்குவமான மனதில் பதிந்துபோன பெரியாரின் சிந்தனைகளும் இவர் எழுத்துக்களில் வெளிப்படும் பாங்கில், இயல்பான நடையில் உண்மையை விளக்கியுள்ளதை அறியமுடிந்தது.
-முனைவர் மு.சு.கண்மணி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
ஸ்ரீ சேவுகள் அண்ணாமலை கல்லூரி.
தந்தை பெரியாரின் சிந்தனைகளை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வரும் முனைவர் தி.நெடுஞ்செழியன், அறிவியல் தமிழில் முனைவர் பட்டமும் இதழியலில் கூடுதல் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியிலும் திருச்சி தூய வளனார் கல்லூரியிலும் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவராக உள்ளார். இவரும் இவருடைய சகோதரர்கள் அறுவரும் சுயமரியாதைத் திருமணம் புரிந்தவர்கள் என்பதே. இவரது குடும்பத்தினர் அனைவருமே பெரியாரியச் சிந்தனைகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் என்பதற்குச் சான்று.
Be the first to rate this book.