சிவபெருமானின் முக்கண்கள் என்று போற்றப்படும் புராணங்கள் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகும். இம்மூன்று புராணங்களிலும் சிவனடியார்களின் சிறப்பினைப் பெரிதும் விரித்துரைக்கும் பக்திக்காவியமே பெரியபுராணம் ஆகும்.,இப்பக்திக் காவியத்தை நமக்கு வழங்கியவர் சேக்கிழார் பெருமான் ஆவார்.
பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு மரபுகளில், பல்வேறு தொழில்கள் செய்து அந்த தொழிலையே தொண்டிற்குரிய தொழிலாக்கி அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளில் சுடர்விட்டுச் சிவபெருமானின் அருளைப் பெற்ற எளியவர்களின் வரலாற்றினை உரைக்கும் காவியமே பெரியபுராணம்.
Be the first to rate this book.