இந்தப் புத்தகம் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றையும் பெரியாரின் அரசியல் செயல்பாட்டையும் பெரியாரிஸ்டுகளின் சமூகச் செயல்பாட்டையும் பதிவு செய்கிறது.
தந்தை பெரியாரின் சிறு வயது தொடங்கி அவர் வாழ்க்கையை மாற்றிய முக்கியமான செய்திகள் அனைத்தையும் இந்த நூல் மூலம் முனைவர் மீனாட்சி பதிவு செய்துள்ளார். அதேபோல் பெரியாரின் சமூகப் பணியான சாதி ஒழிப்பு சுயமரியாதை போன்ற மிக முக்கியமான அரசியல் செயல்திட்டங்களை எப்படி பெரியார் சாத்தியப்படுத்தினார் என்பதை இந்த நூல் முழுக்க ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளார்.
பெரியாரின் வாழ்வும் பணியோடும் பெரியாரைப் பின்பற்றி வாழ்ந்த அடுத்த தலைமுறை பெரியாரிஸ்டுகளான மறைந்த பேராசிரியர் நன்னன், பேராசிரியர் சுபவீ. மற்றும் வழக்கறிஞர் அருள்மொழி போன்றவர்களுடன் நேர்காணல் மூலம் பெரியாரின் கொள்கைகள் அரசியலில் ஏற்படுத்திய விளைவுகளையும் இந்த நூலில் முனைவர் மீனாட்சி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
Be the first to rate this book.