ஆரம்ப அறிவியல் கர்த்தாக்களாகிய கலீலியோ, நியூட்டன் ஆகியோரின் கருத்தாக்கத்தை, மேலும் அவர்கள் விட்டுச்சென்ற கோட்பாடுகளை, காலம், பெருவெளி என்று யாரும் முன்வைக்கத் தயங்கிய கோட்பாட்டை உலகமே வியக்கும் வண்ணம். ஐன்ஸ்டைன் முன்வைத்தார். குறிப்பாக ஒளியின் திசைவேகம் எந்த நிலையிலும் பேரண்டம் முழுக்க மாறாமல் இருக்கும் என்ற கோட்பாட்டை நிறுவினார். சார்பியல் என்ற இந்த அரிய அடிப்படை கோட்பாடே, பேரண்டம் குறித்த புதிர்களை மக்களுக்கு விடுவித்துள்ளது. இதை ஆசிரியர் ப. ரகுமான் மிகவும் எளிதான தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் எளிய நடையில் இப்படைப்பில் புரிய வைத்துள்ளார்.
அறிவியலின் ஆரம்பக் கட்டத்திலிருந்து 400 வருட அறிவியலை எந்த ஒரு கேள்விக்கும் இடமின்றிப் பல்வேறு உதாரணங்களுடன் புரிந்துகொள்ளும்படி எளிய தமிழில் மிகவும் அழகாக இயற்றியுள்ளார்.
குறிப்பாக, நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு அடுத்த பக்கத்திலேயே அவரே அக்கேள்வியை முன்வைத்து அதற்கு இணையான பதிலையும் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார். ஒளியியலைப் பற்றியும் பெருவெளி, காலம் குறித்து அதிக சிரத்தையுடன் பல்வேறு அறிஞர்களின் எடுத்துக்காட்டுகள், நிரூபணங்கள், தோல்விகள், ஆய்வுக் கட்டுரைகள் மூலம் ஐன்ஸ்டைனின் முடிவுகளை ஆசிரியர் ப. ரகுமான் மேலும் விரிவாக உரைத்துள்ளார். இந்தப் படைப்பு சார்பியலாக ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு நமக்குப் புரியாத பேரண்டத்தின் முடிச்சுகளை எளிய தமிழில் அவிழ்த்து, நாமே கண்டுபிடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார். ஒளியியல் மற்றும் சார்பியல் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால் இந்தப் படைப்பு நமக்கு நண்பன் ஆகிப் போகும்.
Be the first to rate this book.