இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டிருக்கும் 23 பெண்களில் பலர், பள்ளிக்குப் போய்ப் படிக்க முடியாத நிலையில் அடிப்படைக் கல்வியுடன் எழுதத் தொடங்கித் தம்மை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். சிலர், பள்ளிக்குச் சென்றபோதும் பல ஆண்களுக்கு இடையில் ஓரிருவரெனப் பெரும் சவால்களைச் சந்தித்துப் படித்திருக்கின்றனர். பல மொழி விற்பன்னர்களாக இருந்திருக்கின்றனர். இல்லத்தின் கடமைகளை முடித்து உடல் சோர்ந்தாலும் மனம் சோராமல் எழுத்துக் கடமைக்குள் நுழைந்தவர்கள் இருக்கின்றனர்.
தனித்தமிழியக்கம், காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம் எனத் தாங்கள் ஈடுபடும் இயக்கம் எதுவாயினும் அதன்பக்கம் முழுமையாய் நின்று. அதன் கொள்கைகளில் தோய்ந்து, தங்கள் வாழ்வையே தத்தம் செய்திருக்கிறார்கள்.
Be the first to rate this book.