மானுட வளர்ச்சியின் மகத்தான நூற்றாண்டாகப் 19,20ஆம் நூற்றாண்டுகளைக் குறிப்பிடுவர். அந்தக் காலக்கட்டம்தான் மாந்த நலத்துக்காகவும், மனித வளத்துக்காகவும் பல புதிய கண்டுபிடிப்புகள் தோன்றி வளர்ந்துள்ளன. மனிதனின் நாகரிகமும் பண்பாடும் மலரமலர புதிய புதிய நோய்களும் தோன்றின. அந்நோய்கள் மாந்த வளர்ச்சியைப் பாதித்தன. அதற்கெனப் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றின. அத்தகைய கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் பெனிசிலின். பல்வேறு நிலையில் நடைபெற்ற போர்கள், இயற்கை இடர்ப்பாடுகள், பிராணிகளால் ஏற்படும் துன்பங்கள் போன்றவற்றால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு கெடுதல் தரும் நுண்ணுயிரிகள் தொற்று நோய்களை உருவாக்கின. அவற்றைத் தடுப்பதற்கான பெனிசிலின்' என்ற மருந்தை ஸ்காட்லாந்தைச் சார்ந்த அலெக்சாண்டர் பிளெமிங் என்பவர் கண்டுபிடித்தார். அவருடைய கண்டுபிடிப்புக்குப் பின்னர் தொற்று நோய்கள் குறைந்தன. வாழ்க்கை நிலை உயர்ந்தது. மக்களிடம் மகிழ்ச்சிப் பெருகியது. பல்வேறு வகையான ஆன்டி பயாட்டிக் மருந்துகள் தோன்றக் காரணமானது.
Be the first to rate this book.