எல்லார்க்கும் பெரியார் அவர். பெண்ணினத்துக்கு தந்தை அவர் எல்லா அப்பாக்களும் மகளுக்கு சுதந்திரம் வழங்கும் அப்பாக்கள் அல்ல ஆனால் மகளுக்கு மனைவிக்கு சகோதரிக்கு எதிரிக்கு - எந்நாட்டுப் பெண்ணுக்கும் சுதந்திரம் கொடுத்த தந்தை அவர் கொடுத்த என்பது கூட தவறானது எடுத்துக் கொள்ள விரும்பிய தந்தை அவர் தான். ரத்த பேதம் கூடாது. பால் பேதம் கூடாது என்பதே பெரியாரியம் பெண் என் அடிமையானான்? என்ற கேள்விக்கு மனு என்பதே ஒற்றை பதில் சமூகத்தின் சரிபாதியை சனாதனம் முடக்கியதை உடைத்தது பெரியாரின் கைத்தடி அவர் தயாரித்துக் கொடுத்த அறிவாயுதங்களில் ஒன்று தான் இந்நூல் இது மாறுதலை நோக்கிச் செல்லும் காலம். இக்காலத்தை உருவாக்கியதில் இந்த எழுத்துக்கு பெரும் பங்குண்டு. கற்பு கர்ப்பப்பை ஆண்மை -பெண்மை தாய்மை அச்சம் நாணம் புனிதம் தீட்டு திருமணம் காதல் எல்லாம் நடைமுறையில் பழுதுபார்க்கப்பட இதுவே பாடம் கிழவன் கரை கண்டவன், ஈறை நீக்குவதில்!
-ப.திருமாவேலன்
Be the first to rate this book.