பெண்கள் தங்களைத் தாங்களே அடிமைகளாகக் கருதுவதை நிறுத்தி, கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை ஆகியவற்றில் சம உரிமை கோரிப் போராட வேண்டும். மதங்கள் பெண்களின் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் பிடியிலிருந்து பெண்கள் விடுபட வேண்டும். திருமணம் என்பது பெண்ணை அடிமைப்படுத்தும் ‘கொடுப்பினை’ அல்ல. ‘வாழ்க்கைத் துணை’ என்ற அடிப்படையில் சமத்துவமாக அமைய வேண்டும்! என்றும் பெரியார் விரும்பினார்.
Be the first to rate this book.