1848இல் வெளிவந்த கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு 1872இல் ஏங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில், 'கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டதும், இந்த 25 ஆண்டுக்காலத்தில் சூழ்நிலைமை மாற்றமடைந்தது உண்மையே. ஆயினும், அதன் மூலவிதிகள் அப்போது எவ்வளவு சரியானவையோ, இப்போதும் அதே அளவு சரியானவை' என்கிறார்.
இந்த ஆவணம் உலகத்தை மிகவும் தெளிவாக, திறமையாக ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பரிசீலித்தது. சமூக வாழ்க்கை உட்பட. மனிதனின் வாழ்க்கைக் காலங்கள் அனைத்தையும் இயக்கவியல் கண்ணோட்டத்தில் அணுகியது. இயக்கவியல் வாதமே முழுமையான, ஆழமான பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் எனத் தெளிவுபடுத்தியது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றியும், புதிய கம்யூனிஸ்ட் சமூகப் படைப்பு கர்த்தாவான தொழிலாளி வர்க்கம் நிர்வகிக்க வேண்டிய புரட்சிகர வரலாற்றுப் பாத்திரம் பற்றியும் விளக்கியது என கம்யூனிஸ்ட் அறிக்கையின் முக்கியத்துவம் குறித்து, 1914இல் லெனின் குறிப்பிட்டார்.
150 ஆண்டுகளைக் கடந்தும் கம்யூனிஸ்ட் அறிக்கை, உலகத் தொழிலாளர் இயக்கத்திற்கு உந்துசக்தியாக உள்ளது. அவ்வழியில். 'சாதிய இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர். தந்தை பெரியாரின் படைப்புகள் காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளது.
ஆண் மையச் சிந்தனை. பெண் அடிமைத்தனம். கற்பு. விபச்சாரம். போகப் பொருளாக பெண் எனப் பெண்ணுக்கு எதிரான அனைத்துவிதமான சிந்தனை போக்குகளுக்கு எதிரானதாக, பெண்ணியப் பார்வையில் தந்தை பெரியாரின், 'பெண் ஏன் அடிமையானாள்?" நூல் அமைந்துள்ளது.
1942இல் நூல் வடிவம் பெற்றிருப்பினும், கட்டுரைகள் 1928, 1930 காலக்கட்டங்களில் எழுதப்பட்டவையாக உள்ளன. பெண்கள் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும். முழுமையான 'பெண் விடுதலை' சாத்தியப்படாமல் உள்ளது. இந்திய நிலப்பரப்பில் மட்டுமின்றி உலகெங்கிலும் பெண் ஒடுக்குமுறை எங்கெங்கு உள்ளதோ, அங்கெல்லாம், 'பெண் ஏன் அடிமையானாள்? நூலின் தேவை உள்ளது.
இந்திய, உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய முக்கிய படைப்புகளில் தந்தை பெரியாரின், 'பெண் ஏன் அடிமையானாள்? நூலும் ஒன்று.
Be the first to rate this book.