புத்தம் புதிய கதைக்கரு இதுவரை யாரும் தொடாத கதைக்களம். செயற்கைப்பூச்சு இல்லாத இந்த மண்ணின் மாந்தர்களின் கதை பூவாத்தா. அவள் மகள் பொன்னரசி, பீர்க்கம்காய் பொறுக்குதல் என இயல்பான சம்பவங்களுடன், எளிமையான வர்ணனைகளுடன், கதை நிகழ்கிறது. இயற்கை வளத்தை அழிக்காமல் பயன்படுத்தும் உத்திகள் அருமை ஓர் ஏழைப்பெண்ணின் சலியாத உழைப்பு, அவளைச்சுற்றி உள்ளவர்களின் மனித நேயம், அவள் பட்ட கஷ்டங்களுக்கு ஒரு விடிவு காலம் என கதை தெளிந்த நீரோடை போல் செல்கிறது கதை முடிவு அதுவே மெய்சிலிர்க்க வைக்கிறது. சமுதாயத்திற்கு நீதியுடன் சேதி சொல்லும் அற்புதமான கதை.
"இந்தப் புந்தகம் வெளிவருவதற்கு பெரு முயற்சிகள் மேற்கொண்ட திரு.கே.ஆர்.என்.மனோஜ் திருப்பூரை சேர்ந்த இளைஞர். மெக்கானிக் என்ஜினியரிங்கில் எம்.டெக் முடித்திருக்கிறார் அதே சமயம் எலக்ட்ரிகல் பிரிவிலும் பரிச்சயம் மிக்கவர். இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக் சயின்ஸ துறையில் ஸ்பெஷலிஸ்ட் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கள் விக்கும் வேலை வாய்ப்புக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார் CADD ட்ரெய்னர், தொழிலதிபர் கலை இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்"
Be the first to rate this book.