இப்புதினம் சங்க இலக்கியங்களில் காணலாகும் பாணர் மரபுகளையும் எயினர் மரபுகளையும் ஆய்ந்தெடுத்து அதனுள் தனது எல்லையில்லா கற்பனை ஊற்றுகளை வற்றா நதியென வளங்கொழிக்கச் செய்துள்ளது என்பது மறுத்தற்கியலா உண்மை. சிந்தனைக் கருவூலமாகத் திகழும் சங்கப் பாடல்கள் பலவற்றின் நயங்கள் பார்புகழ் பட்டுவண்ணம் தீட்டப்பட்டுப் பளிச்சிடுகின்றன. இப்புதினத்தை வாசிக்கும் ஒவ்வொரு நபருக்கும், பண்டைய தமிழர்களின் கொற்றவை வழிபாட்டுமுறை கண்முன் நிழலாடும் என்பது மிகையாகா, வான்புகழ் வள்ளுவனின் வார்த்தை விளையாட்டுகள் பற்பல இந்நூலில் ஆனந்தக் கூத்தாடுகின்றன. சங்க இலக்கியச் சிந்தனைகளுக்கு வடிவங் கொடுக்க கருதும் சிந்தனைச் சிற்பிகளின் கைகளில் செதுக்கும் உளியாகத் தவழ வேண்டிய தகுதிப்பாடுடைய பனுவலிது.
-பெ.இளையாப்பிள்ளை
Be the first to rate this book.