தொல்காப்பியமும் வடமொழி மரபும்: ஈவமசிங்கைப் பற்றிக் குறிப்பிடும் சங்கப் பாடல்: அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறதா திருக்குறள்? அருட்பா x மருட்பா பிரச்சனை உள்சாதிப் பிரச்சனை: சமஸ்கிருதமொழி மற்றும் வேதம் பற்றிய இந்தியப் பொய்கள்: ஜெயமோகனுக்கும் உண்மைக்கும் துளி அளவாவது சம்பந்தம் உண்டா? இப்படித் தொல்காப்பியம் தொடங்கிச் சமகால இலக்கிய, இலக்கண மொழி இயங்கியலை அவற்றின் சமூக வரலாற்றியலை ஒருங்கிணைந்த தகவல் களஞ்சியமாக இந்நூல் அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகால மொழிப் பனுவல்களின் இயங்கியமை அறிந்துகொள்ளும் தரவுத்தளம் இந்நூல் இத்துறைகளில் ஆய்வுகளை நிகழ்த்திட பல ஆய்வுக் களங்களைக் கொண்டமைகிறது.
வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் தரவுகளுக்கும் நடப்புகளுக்கும் உள்ள இடைவெளியைக் கற்பனைகளால் நாம் நிரப்பிக்கொள்ள வேண்டும் என்பார் பொ.வேல்சாமி. இதைத்தான் புது வரலாற்றுவாதமும் (New Historicism) சொல்கிறது. வரலாற்றை எழுதும் முறையியலைச் சொல்லும் இத் துறையின் நவீனப் பார்வையை நாம் வாழும் காலத்தில் ஒரு 'தமிழ்ப் புலவர் பெற்றிருக்கிறார் என்பதே வியப்புக்குரிய ஒன்றாகும். தொழில்நுட்ப வெளியில் தமிழை நவீனப்படுத்தும் பொ.வேல்சாமியின் எழுத்துகள் அச்சு வடிவில் வருகிற இவ்வேளையில் நூலும் நவீனமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்நூல் தமிழின் புதுமையாகவே அமையும்.
Be the first to rate this book.