அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள "பழங்கால தமிழர் வாணிகம்" என்ற இந்நூல் சங்ககால தமிழர்கள் வணிக வலிமையை, கடலியல் சார்ந்த அறிவை எடுத்துக்கூறும் சிறந்த ஆய்வு நூலாகும்.
தமிழ் இலக்கியங்கள், உரோம இலக்கியங்கள், கல்வெட்டுச் தமிழ் இலக்கியங்கள், சான்றுகள் போன்ற எழுதப்பட்டுள்ள இந்நூல் பூம்புகார், தொண்டி, கொற்கை, குமரி, விழிஞம் உள்ளிட்ட தமிழ்நாட்டுத் துறைமுகங்கள் மாபெரும் உலக வணிக மையங்களாகத் திகழ்ந்ததை விளக்குகிறது. பலவகை தரவுகளின் துணையோடு.
வைகை மண்ணிலிருந்தும், காவிரிக் கரையிலிருந்தும் இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்கில் கங்கை வரை தரைவழி வணிகம் செய்ததையும், இலங்கை, பர்மா. அரபு. எகிப்து. உரோமாபுரி வரையிலான கடல்வழி வணிகத்தையும் இந்நூல் விரிவாக விளக்குகிறது.
கடினமான மலைகளையும். கடல்களையும் கடந்து வணிகம் செய்ததில் தமிழர்களின் போக்குவரத்துச் சாதனங்கள் சார்ந்த அறிவியலின் ஆழத்தையும், பண்டமாற்று முறையில் செய்யப்பட்ட வணிக அறத்தின் அகலத்தையும் மயிலை சீனி. வெங்கடசாமி அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.
Be the first to rate this book.