நம் முன்னோர்களின் வாழ்விலே பூத்துக் காய்த்துக் கனிந்த அனுபவ வாக்குகளே பழமொழிகள். அந்த வாக்குகளை உளங்கொண்டு, நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் போது. அப்படிக் கொள்பவரின் வாழ்வு வளமாகின்றது. பழமொழிகளைக் கற்கும்போது, நினைவிற் கொள்ளவேண்டிய ஓர் உண்மை இதுவாகும்.
இனிப் பழையவர்களான நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தோன்றி. காலங்காலமாகத் தொடர்ந்து வழக்கிலிருந்துவரும், 'பழைய வாக்குகள் என்றும் பழமொழிகளைக் கூறலாம். இப்படிக் கூறும்போது, தமிழினத்தின் பண்பாட்டிலே விளைந்த அறிவுச் சுடர்கள் இவை என்ற அறிய வேண்டும். தமிழினத்தின் செம்மையான நல்வாழ்வுக்கு உதவும் அறிவொளி விளக்கங்களாகப் பழமொழிகள் அமைந்து விளங்குகின்றன. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் ஞானத் தெளிவுரைகளாகவும் அவை சுடரிடுகின்றன.
பழமொழிக்கு முதுமொழி' என்றும் ஒரு பெயர். முதுமொழியின் இலக்கணத்தைத் தொல்காப்பியனார். அக்காலத்திலேயே வரையறுத்துக் கூறியுள்ளார்.
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி
Be the first to rate this book.