குழந்தைகள் தங்கள் படைப்புகளில் எப்போதும் அதிசயத்தை ஒளித்தே வைத்திருக்கிறார்கள். அந்த அதிசயத்தைக் கண்டுபிடிப்பது தான் பெரியவர்களுக்கான சவால். படைப்பூக்கம் வறண்ட வாழ்க்கையை வாழும் பெரியவர்கள் அதைக் கண்டுபிடிப்பதில்லை. அவர்கள் குழந்தைகளிடம் கவைக்குதவாத நன்னெறிகளைத் தேடிச் சலிப்பார்கள்.
முதல்வனின் இந்தப் பாடல் மிக எளிமையானது. பாடுவதற்குச் சுலபமானது. நேரடியாகப் பொருள் தருவது. ஆனால் மிகப் பெரும் அறவிழுமியத்தைச் சொல்கிற பாடல் இது. குழந்தைகளின் படைப்பூக்கம் அவர்களுடைய உள்ளுணர்வின் வழியே வெளிப்படுகிறதென்பதற்கு முதல்வனின் இந்தப் பாடல் மிகச் சிறந்த உதாரணம். வாழ்த்துகள் முதல்வன்!
-எழுத்தாளர் உதயசங்கர்
Be the first to rate this book.