பயிற்சி செய்யும் மனம் நூலில், வணிகம், குழந்தை வளர்ப்பு, விளையாட்டு போன்ற எந்தத் துறையிலும் திறன்களை எப்படி வளர்த்துக் கொள்ளலாம் என்பதை தாமஸ் ஸ்டெர்னர் விவரிக்கிறார். இவையனைத்தும் எப்போதுமே சோதித்துப் பார்த்து, திருத்திக் கொள்ளுதல் மற்றும் பயிற்சி என்ற சூழலுக்குள்ளேயே சிக்கியிருக்கின்றன. தோல்வி, மீண்டும் மீண்டும் செய்தல், சிரமம் போன்ற காரணங்களுக்காக நாம் முயற்சி செய்வதை நிறுத்தியிருந்தால், நடப்பது, ஷூ லேஸ்களை முடிச்சிடுவது போன்றவற்றை நாம் கற்றுக்கொண்டிருக்கவே முடியாது. இவ்வாறிருக்க, பெரியவர்களானதும், முதல்முறையில் வெற்றி கிடைக்காதபோது ஓர் இலக்கை எட்டும் முயற்சியை நாம் ஏன் கைவிட்டுவிடுகிறோம்?
ஸ்டெர்னரிடம் இதற்கான பதில் உள்ளது: நாம் பயிற்சி செய்வதன் சித்தாந்தங்களை மறந்துவிட்டோம் ஓர் இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதை எட்டுவதற்காக நிலையான முயற்சியைச் செய்யும் செயல்முறையை மறந்துவிட்டோம். ஸ்டெர்னர் கற்றுக்கொடுக்கும் வழிமுறைகள், சரியான முறையில் பயற்சி செய்வது, ஒரு விஷயத்தில் கைதேர்ந்தவராகும் பயணத்தில் பாரமாக இல்லாமல், செயல்முறையை நிறைவேற்றுவதே ஒழுக்கத்தையும் தெளிவையும் வழங்கும் வழிகாட்டி என்பதைக்காட்டுகிறது.
Be the first to rate this book.