குழந்தைகள் உருவாக்கும் கதைப்புத்தகம் சிறார் சொன்ன கதை. இதில் தொடர்ந்து குழந்தைகளின் சிறந்த கதைகள் புத்தகங்களாக வடிவம் பெறுகின்றன. இதற்கு வரையப்படும் தனித்துவமான வண்ண ஓவியங்கள் குழந்தைகளுக்கு கதைகளின் மேலும் புத்தகங்களின் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்துபவை. கதையை வாசிக்காமலேகூட இந்த ஓவியங்களைப் பார்த்து குழந்தைகளால் ஒரு புதிய கதையை உருவாக்கிவிட முடியும். குழந்தைகளின் இயல்பை மனதில்கொண்டு வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் அவர்களை மெல்ல குழந்தைகள் இலக்கியத்திற்குள் அழைத்துச் செல்பவை.சிறார் சொன்ன கதை வரிசையில் மேலும் ஒரு புதிய கதை பயணச்சீட்டு.
Be the first to rate this book.