'பயணம் ஒரு நன்மருந்து' எனப் பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசன் பல்கலையைச் சேர்ந்த பால் டி நசம்பம் தெரிவிக்கிறார். அவ்வப்போது பயணம் செய்து, மனதைக் குதூகலத்துடன் வைத்திருப்பவர்களுக்கு. ஏற்கெனவே இருக்கும் நோயின் தீவிரம் வெகுவாகக் குறைகிறதாம். நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் அளவைக் குறைக்க, பயணம் எனும் மருந்தை முயன்று பாருங்களேன் என்பது போல் இருக்கிறது இவரது சரளமான எழுத்து நடை. எளிமையாக அதே நேரத்தில் வலிமையுடன்.
இந்த நூலை வாங்கி அதனுள் பயணியுங்கள்.. மதுரையின் வெப்பத்தையும் டார்ஜிலிங்கின் குளிரையும் ஒரே நேரத்தில் உணரலாம். வாங்க பயணிப்போம்!
-ப. திருமலை
ஜெ. தீபா நாகராணி [18.12.1977]
மதுரையைச் சேர்ந்தவர். மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் படிக்கும்போது நாட்டு நலப்பணித் திட்டத்தில் (NSS) சிறந்த மாணவத் தொண்டருக்கான விருதை மாநில அளவில் பெற்றவர் (1998). அதே காலகட்டத்திலேயே சன், விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் விவாத அரங்குகளில் பங்கேற்றவர். இவர் M.A. M.Phil.. (வரலாறு) பட்டம் பெற்றிருக்கிறார். குங்குமம் தோழி இதழில் ஓராண்டுக் காலம் (2014-15) 'ஊஞ்சல்' என்ற தலைப்பில் எழுதிய தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. பாவையர் மலர் இதழில் 'பயணம்' என்ற தலைப்பில் ஒரு வருடம் எழுதிய தொடர். சுற்றுலாவின் முக்கியத்துவத்தைப் பேசியது. ஜன்னல், கல்கி, ஃபெமினா, அந்திமழை, அவள் விகடன். செம்மலர், ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இலக்கியக் கூட்டங்களில் நூல் விமர்சனம், பள்ளி, கல்லூரிகளில் உரையாற்றல், சிறுகதைக்கான பயிற்சிப் பட்டறை. பழங்குடியினப் பெண்களிடையே விழிப்புணர்வு ஊட்டும் முகாம்களில் கலந்து கொள்ளல் என நீள்கிறது இவரின் பயணம் தொடர்ந்து மாணவர்கள், மகளிர் என முக்கியத்துவம் கொடுத்து உரையாற்றி வருவது இவரின் சிறப்பு.
Be the first to rate this book.