இரண்டு கதைகள் ஒரே புத்தகத்தில். "பயணம் (இல்லை) பணயம்" உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நகைச்சுவையாக "பென் டூ பப்ளிஸ் 2019" போட்டிக்காக எழுதப்பட்டது. அப்போட்டியில் வெற்றியும் பெற்றது. இந்தியாவில் இருந்து மூன்று மாதம் ப்ரான்ஸ் நாட்டிற்கு வேலைத் தொடர்பாக சென்றவர்களின் இரு நாட்கள் சாலை வழி பயணம்தான் கதைக்களம். கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் அரசியல், கொஞ்சம் பயணம் என்று கதையை விறுவிறுப்பாக ஆசிரியர் அமைத்துள்ளார்.
"பாண்டியப் பேரரசு" - அண்ணா சிறுவர் கதை போட்டி 2020-ல் சிறப்பு பரிசு பெற்ற கதை. தமிழர் வரலாறு, உணவு அரசியல், எதிர்காலம் போன்றவைகளை தொட்டு ஆசிரியர் விறுவிறுப்பாக கதையை அமைத்துள்ளார். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்குமான கதை.
Be the first to rate this book.