பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் என்ற நூலின் இரண்டாம் பாகம் இது. இந்நூலில், பத்துப்பாட்டின் ஏனைய இலக்கியங்களான முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை. குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகியவை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பாடலுக்கும் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில், பாடலின் உரைநடைச் சுருக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த பகுதியில், அப்பாடலிலுள்ள சில சிறப்புக்காட்சிகள் விளக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களை ஆழ்ந்தும் நுணுக்கமாகவும் படிக்கவேண்டுமானால், அகம் - புறம் பற்றிய ஒரு தெளிவான சிந்தனை வேண்டும். தமிழ் படித்தோர் அனைவரும் சங்க இலக்கியங்கள் பற்றிய ஓரளவு அறிவேனும் பெற்றிருக்கவேண்டும் என்பது நூலாசிரியரின் கனவு. அதற்கு இந்தப் புத்தகங்கள் சிறந்த வழிகாட்டிகளாக அமையும்.
Be the first to rate this book.