நமது தாய்மொழியான தமிழ்மொழியை இப்பொழுதெல்லாம் நாம் 'செம்மொழி' என்று அழைத்துவருகிறோம். அவ்வாறு நாம் கூறிக்கொள்ளலாம். உலகம் ஒப்புக்கொள்ள வேண்டுமே! உலகம் என்பது என்ன? 'உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே' என்ற ஒரு சொற்றொடர் தமிழில் உண்டு. அதாவது. சிந்தனையாலும், செயல்களாலும் உயர்ந்து விளங்குபவர்களைத் தான் உயர்ந்தோர் என்கிறோம்.
இந்த நூலில் நாம் காண்பது சங்கத்தமிழ் நூல்களில் பத்துப்பாட்டு என்ற நூலை மட்டுமே. உலகத்தில் எந்த ஒரு காலத்திலும் இயற்றப்பட்ட எந்த ஒரு இலக்கியத்திற்கும் ஈடான பெரும் தகுதியுள்ள இலக்கியம் பத்துப்பாட்டு என்பது பல மொழிகள் அறிந்த அறிஞர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழில் சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் எழுதப்பட்ட நூல்கள் உண்டு. ஆனால் இலக்கியங்கள் அவர்களுக்காக எழுதப்படுவது அரிதாகவே காணப்படுகிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்களும் அவற்றின் சுவை குன்றாமல் எளிய முறையில் இளைஞர்களுக்காக எழுதப்படவேண்டும். இந்த நோக்கத்தில் வெளிவந்திருக்கும் நன்முயற்சி இது.
Be the first to rate this book.