1997 ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்காக பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பரிசு பெற்றது.
ஈரம் உலர்வதற்கு முன்னதாகவே என் முன் வைக்கப்படுகிற கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்படத் திறனாய்வுகள் எனும் இவனது அனைத்து எழுத்துகளிலும் இந்த மிருது இளைஞனின் எதிர்காலம் குறித்த எனது நம்பிக்கைகள்... அடைமழை காலத்தைய வெள்ள அளவாய் உயர்ந்து கொண்டே செல்கிறது.
- அறிவுமதி
சுவாசத்தைப்போல், தாய்மொழி போல், சைக்கிள் மிதிப்பது போல் கவிதை படு இயல்பாக இவருக்கு காய் வருகிறது. இக்கவிதைகள் அடடா! இவை நான் எழுதியிருக்க வேண்டியவை அல்லவா! என்ற உணர்வையே என்னுள் ஏற்படுத்தின. என்னைப்போல நிறையபேர் நினைக்கப் போகிறார்கள்.
- பாலுமகேந்திரா
எங்கள் ஊர் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து ஜோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும் சிலருக்கு கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு இந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் நல்ல கவிதைகள்தாம் வரும்
- பாரதிராஜா
Be the first to rate this book.