சிறு குற்றவழக்கில் கைது செய்யப்படலை தவிர்க்க தூத்துக்குடியை சார்ந்த இசக்கி (வயது 18) எனும் இளைஞனை அவனது குடும்பத்தார் கேரளாவில் கண்ணூர் பகுதியில் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் வரைக்கும் தலைமறைவாக இருக்க அனுப்புகிறார்கள். குமரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் அதிகமாக கேரளாவில் தேனி விவசாயம் செய்கிறார்கள். அவ்வாறு கேரளாவில் தேனிக்கள் வைத்திருக்கும் செபாஸ்டின் என்பவரது பகுதிக்கு இசக்கி செல்கிறான். சினிமா பைத்தியமான அவன் அந்த காலகட்டத்தில் (2013) திரைக்கு வந்த (கடல்) திரைப்படத்து பாடல்களை உச்சரித்து திரிகிறான். அங்கு அவன் பார்க்கும் ஒரு பெண் (கடல் பட கதாநாயகி பியாட்டிரஸ் போலிருக்கிறாள்) மீதான ஒரு தலைக்காதல், அவனை அபாயகரமான கண்ணூரின் அரசியலுக்குள் இழுத்து செல்கிறது. 70 களில் வெளிவந்த Taxi driver திரைப்படத்தில் Robert De niro வின் கதாபாத்திரமான Travis Bickle யை விட பலமடங்கு daredevil ஆன இசக்கி எவ்வாறு அந்த சூழலை எதிர்கொண்டான் என்பதை 'பற்றியெரிந்த தேன்காடு' திரைக்கதை சொல்கிறது. இசக்கியின் தலைமறைவின் உண்மையான நோக்கம் ? அவனது பின்னணி இவைகளை திரைக்கதை லாவகமாக கையாண்டு திரைக்கதையை மேலும் விறுவிறுப்பாக்குகிறது.
Be the first to rate this book.