இந்த நூலின் முதல் பதிப்பு வெளியாகிக் கால் நூற்றாண்டு சுடந்து விட்டது. என்றாலும் இப்போது வாசித்தாலும் காலப் பொருத்தப்பாடு உடையதாகவே இந்நூல் அமைந்துள்ளது. சங்ககாலம் பொற்காலம் அன்றைக்கு எல்லாமே இருந்தது, என்பது போன்ற வெட்டிப் பெருமிதங்களில் தமிழ் ஆய்வுலகம் அமிழ்ந்து கிடந்த அந்த நாட்களில், பெண் நிலை நின்று பழந்தமிழ் இலக்கியங்களைக் கட்டுடைத்துப் பார்க்கும் புதிய பார்வையோடு இந்த நூல் அன்று வந்தது. முன்னிலும் பார்க்க பெண்ணிய அரசியல் புதிய பாய்ச்சல் வேகம் எடுத்துள்ள இன்றைய காலத்தின் கருத்தியல் போராட்டத்துக்கு இந்த நூல் ஒரு கை வாளாக அமையும் என்பதில் ஐயமில்லை.
-ச.தமிழ்ச்செல்வன்
Be the first to rate this book.