நான் எழுதியவற்றில் மிகக் குறைவான படிகள் விற்பனையான நூல் இது. ஆனால் அதிகமாக விற்றிருக்க வேண்டிய நூல் இதுதான் என நினைக்கிறேன். கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உரிய துறை பதிப்பு எனக் கருதிப் பொதுவாசகர்கள் புறக்கணித்திருப்பார்களோ என எண்ணியதுண்டு. ஆனால் என் மொழிநடையும் ஆய்வை விவரிக்கும் விதமும் கல்வித்துறை ஆய்வுகளிலிருந்து வெகுவாக வேறுபட்டவை. பொதுவாசகரின் கவனத்தில் பதிப்புணர்வை இருத்த வேண்டும் என்பதே என் நோக்கம். நூல்களைத் தேடித் தேடி வாங்கி வாசிக்கும் வாசகர் நல்ல பதிப்புகளை நாடிச் சென்றால் அவர்களின் வாசிப்பு எளிமையானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையும். அதற்கு உந்தித் தள்ளும் கட்டுரைகள் இவை எனத் தாராளமாகச் சொல்ல முடியும்.
- பெருமாள்முருகன்
Be the first to rate this book.